சந்திரபாபு நாயுடுவின் சமயோசித புத்தி… டாடா குழுமத் தலைவரை வளைத்த பின்னணி!

Published On:

| By Kumaresan M

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக டாடா சன்ஸ் குழுமத் தலைவரான சந்திரசேகருக்கு முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகனும் அமைச்சருமான நர லொகேஷ் ஆகியோர் ஆந்திர பிரதேச புதிய தலைநகரம் அமராவதியில் டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் சந்திரசேகரனை சந்தித்து பேசினர். தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தன்னுடைய பழைய நண்பரும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான என்.சந்திரசேகரனுடன் சிறப்பான சந்திப்பு நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திர அரசை பொறுத்தவரை முதலீட்டுக்காக பல்வேறு தொழில்துறை தலைவர்களை உறுப்பினராக கொண்ட ஒரு பொருளாதார மேம்பாட்டு பணி குழுவை உருவாக்கி வருவதாகவும், 2047-ஆம் ஆண்டுக்குள் ஸ்வர்ண ஆந்திர பிரதேசத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த பணி குழு செயல்பட உள்ளாகவும் தெரிவித்துள்ளார். இந்த குழுவின் இணை தலைவராக டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் செயல்படுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் சந்திரபாபு நாயுடு  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய தொழில் கூட்டமைப்பு அமராவதியில் அமைக்கவுள்ள உலகளாவிய தலைமைத்துவ மையத்தின் பங்குதாரராக செயல்பட  டாடா நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது என்றும் விசாகப்பட்டினத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் சந்திரபாபு கூறியுள்ளார். ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவுடன்  ஆந்திரா நல்ல உறவை கட்டி எழுப்புவது உட்பட பல துறைகளில் எப்படி கூட்டாக செயல்படுவது குறித்து தாங்கள் ஆலோசனை செய்ததாகவும் தன் பதிவில் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன் 

பாடகி பி.சுசீலாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவர்கள் கொடுக்கும் அப்டேட்!

ஆவணி மாத நட்சத்திர பலன் – பூராடம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share