கடந்த கால செலவுகளின் தாக்கத்தை ஈடுசெய்ய 2024 ஜனவரி 1 முதல் தனது வணிக வாகனங்களின் விலையை 3 சதவிகிதம் வரை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து டாடா வணிக வாகனங்களின் விலைகளும் 3 சதவிகிதம் அதிகரிக்கப்பட உள்ளதாகவும், இந்த விலை அதிகரிப்பு ஆனது வருகிற 2024 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும், வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு அதிகரிப்பது இந்த விலை உயர்வுக்கு காரணமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் ரூ.12,800 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான டாடா குழுமத்தில் ரூ.4,200 கோடி டாலர்கள் மதிப்பிலானது டாடா மோட்டார்ஸ் ஆகும். கார்கள் மட்டுமின்றி, பிக்-அப் டிரக்குகள், லாரிகள் மற்றும் பேருந்துகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்வதிலும் இந்திய அளவில் டாடா மோட்டார்ஸ் முன்னணியில் உள்ளது.
டாடா வணிக வாகனங்களின் விலைகள் இந்த 2023ஆம் வருடத்தில் ஏற்கனவே மூன்று முறை அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் 1.2 சதவிகிதமும், மார்ச்சில் சுமார் 5 சதவிகிதமும் அதிகரிக்கப்பட்டு இருந்தன. கடைசியாக கடந்த அக்டோபர் மாதத்தில் கூட 3 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று மாதங்களிலேயே மீண்டும் ஒருமுறை அவற்றின் விலைகள் 3 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது.
இந்த நிலையில், மாருதி சுசூகி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹோண்டா மற்றும் ஆடி நிறுவனங்களும் தங்கள் வாகனங்களின் விலையை ஜனவரியில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: எண்ணெய் வைத்து தலைக்குக் குளிப்பது சரியா?
கிச்சன் கீர்த்தனா: வெற்றிலை கஷாயம்