டாட்டா குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு, 365 பில்லியன் டாலரை தாண்டியதால் இந்திய தொழில்துறையினர் அதைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவின் பாரம்பரிய நிறுவனங்களில் முக்கியமானது டாட்டா. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே டாட்டா நிறுவனம் பல்வேறு தொழில்களில் சாதித்து வருகிறது. ஒருவகையில் டாட்டா இந்தியாவின் அடையாளமாகவும் விளங்குகிறது.
இந்தியாவில் விமான சேவையைக் கொண்டு வந்த டாட்டா, பின்னர் அதை அரசாங்கத்திடம் இழந்து, அண்மையில் திரும்பப் பெற்றிருக்கிறது.
கொரோனா காலத்தில் டாட்டா நீட்டிய உதவிக்கரம் இதற்கு ஓர் உதாரணமாகும். கடந்த கால் நூற்றாண்டு காலமாக டாட்டா நிறுவனத்தின் அனைத்துமாக இருந்த ரத்தன் டாட்டா போன்றவர்கள், டாட்டா குழுமத்தின் வளர்ச்சிக்கும், நற்பெயருக்கும் காரணமாகி இருக்கின்றனர்.
இந்த நிலையில், டாட்டா குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பானது 365 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதை தற்போது கடந்துள்ளது.
பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே 341 பில்லியன் அமெரிக்க டாலராகும், ஆனால், அண்டை தேசத்தின் ஜிடிபி-யை விஞ்சி உயர்ந்துள்ளது டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு. இதில் டாட்டாவின் மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் மட்டுமே 170 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை கொண்டுள்ளது. இது பாகிஸ்தானின் ஜிடிபியின் பாதிக்கு சமம்.
டிசிஎஸ், டாட்டா மோட்டார்ஸ் உட்பட டாட்டா நிறுவனத்தின் 8 நிறுவனங்கள் கடந்த ஓராண்டு காலமாகவே வளர்ச்சியில் பாய்ச்சல் காட்டி வருகின்றன. பங்குச்சந்தைகளில் அவை தங்களது வாழ்நாள் உச்சத்தை தொட்டு வருகின்றன. இந்த தகவல் வெளியானதை அடுத்து பங்குச்சந்தையில் டாட்டா குழும பங்குகளை வாங்குவதில் போட்டி நிலவியது. ஓராண்டாக டாட்டா குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் லாபம் ஈட்டி வருவதால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதல் தனிப்பட்ட முதலீட்டாளர் வரை டாட்டா நிறுவனங்கள் வரவேற்பு பெற்று வருகின்றன.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
சண்டிகர்… சாபமா? சாம்பிளா? அப்டேட் குமாரு
சோனியா, நட்டா, எல்.முருகன்… : மாநிலங்களவை எம்.பி.க்களாக தேர்வு!