தினமும் 60 கி.மீ தூரம் நெடுஞ்சாலை அமைக்க இலக்கு: கட்காரி

இந்தியா

நடப்பு நிதியாண்டில் நெடுஞ்சாலை கட்டுமானத்தின் இலக்காக 12,000 கி.மீ நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தினமும் 60 கி.மீ தூரம் நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

டெல்லியின் குர்கிராமில் நடந்த தொழில்முனைவோர் கூட்டத்தில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசியபோது,

“சிறந்த சாலை உள்கட்டமைப்பு வசதிகளே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன.

அந்த வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் ஆகியவை நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளை நிர்மாணிப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

Target to build 60 km highway daily nitin gadkari

நடப்பு நிதியாண்டில் மட்டும் நெடுஞ்சாலை கட்டுமானத்தின் அதிகாரபூர்வ இலக்காக 12,000 கிலோ மீட்டர் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே 2019-20இல் 10,237 கிலோமீட்டர், 2020-21இல் 13,327 கிலோமீட்டர், 2021-22இல் 10,457 கிலோமீட்டராக இருந்தது.

தினமும் 40 கிலோமீட்டர் தூரம் அளவுக்கு நெடுஞ்சாலைகள் போட வேண்டும் என்ற திட்டத்துடன் இலக்கு நிர்ணயம் செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

2020-21ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகம் ஒரு நாளுக்கு 37 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், கொரோனா கால இடையூறுகளால் ஒரு நாளைக்கு 28.64 கிலோமீட்டர் அளவில் சாலைகள் அமைக்கப்பட்டன.

கொரோனா கால இடையூறுகள் முடிந்ததால் தினமும் 60 கி.மீ தூரம் நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கோவை வெடிப்பு: குறி வைத்ததே கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்குத்தான்!  அதிர வைக்கும் உண்மைகள்!

கால்வாய்களில் குப்பைகளைக் கொட்டினால்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *