Tamilnadu decorative vehicles attracted
டெல்லியில் 75வது குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் வீரர்கள் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் இன்று (ஜனவரி 26) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு நட்பு நாட்டின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் குடியரசு தின சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
குடியரசுத் தலைவர் கொடியேற்றிய பிறகு கடமை பாதையில் அணிவகுப்பு நடைபெற்றது.
இதில் ராணுவ வீரர்கள், வீராங்கனைகள் கம்பீரமாக அணிவகுத்து சென்றனர். குறிப்பாக முதல்முறையாக முப்படைகளில் உள்ள பெண்கள் படை பிரிவினர் கலந்து கொண்டனர்.
ராணுவத் தளவாடப் பிரிவில் முதல்முறையாக பணியமர்த்தப்பட்ட 10 பெண் அதிகாரிகளில் தீப்தி ராணா, பிரியங்கா செவ்டா ஆகியோர் பினாகா ராக்கெட் அமைப்பு மற்றும் குண்டுகளைக் கண்டறியும் ரேடார் அமைப்புடன் பங்கேற்றனர்.
வழக்கமாக இடம்பெறும் ராணுவப் பிரிவு பேண்ட் வாத்தியங்களுக்குப் பதிலாக 100-க்கும் மேற்பட்ட பெண் இசைக் கலைஞர்கள் நாதஸ்வரம், நகாடா போன்ற இந்திய இசை வாத்தியங்களை இசைத்தனர்.
குறிப்பாக இந்த அணிவகுப்பில் பிரான்ஸ் நாட்டின் வீரர்களும் கலந்து கொண்டனர். மொத்தம் 95 பேர் கொண்ட அணிவகுப்பு குழுவும், 35 பேர் கொண்ட இசைக்குழுவும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.
இதனையடுத்து மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழ்நாடு சார்பாக ”குடவோலை கண்ட தமிழ் குடியே வாழிய வாழிய வாழியவே” என்ற பாடலுடன் தமிழகத்தின் பழங்கால தேர்தல் நடைமுறையை விளக்கும் அலங்கார உறுதி டெல்லி குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெற்றது.
அலங்கார ஊர்தி அணிவகுப்பிற்குப் பிறகு 1,500 நடன கலைஞர்கள் கொண்ட நடன நிகழ்ச்சி நடைபெற்றது, குச்சிப்புடி, பரதநாட்டியம், மோகினியாட்டம் உள்ளிட்ட நடனங்கள் ஒரே இடத்தில் நடைபெற்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மலைக்கோட்டை வாலிபன்: விமர்சனம்!
பவதாரிணி கடைசியாக பாடிய பாடல் இதுதான்!
Tamilnadu decorative vehicles attracted