அமெரிக்க செனட்டில் தமிழ் பற்றி தீர்மானம்… சம்பவம் செய்த 15 எம்.பி.க்கள்!

Published On:

| By Kumaresan M

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரியமிக்க மாதமாக அறிவிக்க வேண்டுமென தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 15 பேர் சேர்ந்து தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “உலகில் பழமையான மொழி தமிழ். 8 கோடி மக்கள் தமிழ் மொழியை பேசுகின்றனர். அமெரிக்காவில் 3,60,000 தமிழ் அமெரிக்கர்கள் வாழ்கின்றனர். ஜனவரி மாதத்தின் மத்தியில் தை மாதம் பிறக்கிறது. தை மாத தொடக்கத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது, தமிழர்களின் பாராம்பரிய பண்டிகை .

தமிழ்நாட்டை சேர்ந்த அமெரிக்கன் என்ற முறையில், அமெரிக்காவிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை கௌரவிக்கும் வகையில் இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.

அமெரிக்கா என்பது பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் நிறைந்த நாடு. தமிழ் அமெரிக்க மக்களிடத்தில் கொண்ட நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் இந்த தீர்மானத்துக்கு மற்ற எம்.பிக்கள் ஆதரவு தர வேண்டும்” என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

ராஜா கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து நிக்கோலே மெல்லியோடாக்கிஸ, ஸ்ரீ தானேடர், ரோ கண்ணா, சுகாஷ் சுப்ரமணியம் , பிரமீளா ஜெயபால், அமி பெர்கா, இல்கான் ஓமர், யாவேட்டா கிளார்க், சாரா ஜேக்கப்ஸ் ,தெப்ரா ராஸ், டேனி டேவிஸ், டினா டைட்டஸ், டான் டேவிஸ், சம்மர் லீ உள்ளிட்டோர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மாகாணங்களான வடக்கு கரோலினா, விஸ்கான்சின், வெர்ஜீனியா , மினசோட்டா ஏற்கனவே ஜனவரியை தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரித்துள்ளன, மிச்சிகன், ஜார்ஜியா மற்றும் மசாசூசெட்ஸ் போன்ற மாகாணங்கள் தமிழ் மக்களின் கலாச்சார நிகழ்வுகளை அங்கீகரிக்க ஏற்கனவே தீர்மானித்துள்ளன.

எம்.குமரேசன்

பெரியார் குறித்து சர்ச்சை… சீமான் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel