கேரள ஆளுநரை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து நீக்குவதற்கான அவசர சட்ட மசோதாவிற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம், திருவனந்தபுரத்தில் உள்ள APJ அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த டாக்டர் ராஜஸ்ரீயை, பல்கலைக்கழக விதிகளை மீறியதாகக் கூறி உச்சநீதிமன்றம் பதவி நீக்கம் செய்தது.
துணைவேந்தர் பதவிக்கு 3 பேரின் பெயர்களை பரிந்துரைக்கவேண்டும் ஆனால் ஒருவரின் பெயரை மட்டுமே பரிந்துரைத்தது தான் பிரச்சினைக்கு காரணம்.
இதையடுத்து மாநில அரசு பரிந்துரைத்த ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்யுமாறு ஆளுநர் கூறினார். இதற்கு மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஏற்கனவே ஆளுநருக்கும் பினராயி தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கும் இடையே பனிப்போர் இருந்து வந்தது. துணைவேந்தர் நியமனம் தொடர்பான ஆளுநரின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு மோதல் இன்னும் வலுத்தது.
இந்தநிலையில் கேரளாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் வகையில் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யும் அவசர சட்டத்தை கேரளா அரசு கொண்டு வந்துள்ளது.
பல்கலைக்கழங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக உயர்கல்வித்துறை நிபுணர்கள் அல்லது அமைச்சரவை உறுப்பினர்களை பல்கலைக்கழகங்களின் வேந்தராக நியமனம் செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ஆனால் இந்த மசோதாவுக்கும் ஆளுநர் ஆரிப் கான் தான் ஒப்புதல் வழங்கவேண்டும்.
கலை.ரா
அமைச்சர் அன்பிலுடன் அரசுப்பள்ளி மாணவர்கள் துபாய் பயணம்!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு 153 ரன்கள் இலக்கு!