10 நாளில் சிரியாவை சோலி முடித்த தளபதி… யார் இந்த அபு முகமது அல் – ஜோலானி?

சிரியாவில் அதிபர் ஆசாத் ஆட்சி கவிழ்ந்து உள்ள நிலையில், இஸ்ரேல் சிரியாவை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது.

கடந்த 1974-ஆம் ஆண்டு சிரியாவுடனான போர்நிறுத்த உடன்படிக்கையின் போது கோலன் மலைப்பகுதிகள் சிரியா வசம் வந்தது.

சிரியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த குன்று பகுதிகள் தற்போது இஸ்ரேல் வசம் வந்துள்ளது. சிரியாவில் ஆட்சி கவிழ்ந்ததை பயன்படுத்தி இஸ்ரேல் அந்த பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. தற்போது, சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர், ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிரியாவில் ஆட்சி கவிழ ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற போராளி குழுதான் காரணம். அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானிதான் இந்த வெற்றிக்கு காரணம். இவரால்தான் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 1982 ஆம் ஆண்டு டமாஸ்கஸ் அருகே இவர் பிறந்தார். இவரது உண்மையான பெயர் அக்மது அல் ஷாரா என்பதாகும். போராளி குழுக்களிடம் சரண் அடையும்படி வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிரியாவில் அந்நாட்டு அரசுக்கு எதிராக பல அமைப்புகள், போராளிகள் போராடி வருகின்றன. அதில் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் என்ற அமைப்புதான் பலம் வாய்ந்தது. இந்த அமைப்பு கடந்த நவம்பர் 27ம் தேதிதான் அரசுக்கு எதிரான போரை தொடங்கியது. கிட்டத்தட்ட 10 நாட்களுக்குள் இந்த அமைப்பு சிரியாவின் முக்கியமான நகரங்களை கைப்பற்றி விட்டது.

டமாஸ்கஸ் நகரை கைப்பற்றிய பிறகு, இந்த அமைப்பின் மூத்த தளபதி லெப்டினன்ட் கர்னல் ஹசன் அப்துல் – கானி டமாஸ்கஸின் புகழ் பெற்ற மசூதியில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் மசூதிக்குள் வந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் அல்லாகு அக்பர் என்று கோஷமிட்டனர். மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், “இது எங்கள் குழுவுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். தற்போது, சிரியா முற்றிலும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

சிரியாவின் விடுதலைக்காக போராடியவர்களுக்கும் உயிரை இழந்தவர்களுக்குமான வெற்றி இது. ஆசாத்தின் ஆட்சியில் சிரியா ஈரான் நாட்டின் அடிமை போல இருந்தது. ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாகவும் ஆசாத் இருந்தார்” என்று பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

முதல் நாளே இப்படியா? ஷாக் கொடுத்த தங்கம் விலை!

சட்டமன்றத்தில் 3-வது இருக்கை: துரைமுருகன் பக்கத்தில் உதயநிதி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts