சுவிட்சர்லாந்து நாட்டில் சர்கோ பாட் என்ற தற்கொலைக் காப்ஸ்யூல் எளிதாக உயிரை மாய்த்துக்கொள்வதற்காக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 64 வயதுடைய அமெரிக்க பெண் ஒருவர் இந்த காப்ஸ்யூலை பயன்படுத்தி உயிரை மாய்த்துக் கொண்டார்.
சுவிட்சர்லாந்து – ஜெர்மனி எல்லைக்கு அருகில் ஒரு வனப்பகுதியில் உள்ள தி லாஸ்ட் ரிசார்ட் என்ற பெயர் கொண்ட ரிசார்ட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்கொலை காப்ஸ்யூலை பயன்படுத்தி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் இதுவே முதல்முறை.
இந்த காப்ஸ்யூலுக்குள் நுழைந்து உள்ளே இருக்கும் பட்டனை அழுத்தினால் சில நிமிடங்களில் இறந்து விடுவார்கள். காப்ஸ்யூலின் உள்ளே நைட்ரஜன் வாயு வெளியாகும். நைட்ரஜன் வாயு விஷம் இல்லை என்றாலும், அது ஆக்ஸிஜனைக் குறைத்து விடும். இதனால், உள்ளே இருப்பவர் சில நிமிடங்களிலேயே உயிரிழந்துவிடுவர்.
அமெரிக்க பெண் உயிரை மாய்த்த தகவல் வெளியானதையடுத்து, போலீசார் ரிசார்ட் உரிமையாளர் புளேரியன் வில்லிட் , பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் மற்றும் இரு சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்கொலைக்கு உதவியதாக சுவிட்சர்லாந்து நாட்டில் முதல்முறையாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது இதுவே முதன்முறை.ஏனெனில், இங்கு மக்கள் உயிரை மாய்த்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாருடைய உதவியும் இல்லாமல் தானாக உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்பதே சுவிட்சர்லாந்திலுள்ள சட்டம் ஆகும்.
இது குறித்து, சுவிட்சர்லாந்து நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எலிசபெத் கூறுகையில், “கைதான 4 பேரும் தற்கொலைக்கு உடந்தை மற்றும் தூண்டுதலாக இருந்துள்ளனர். நைட்ரஜனை பயன்படுத்தி உயிரை எடுக்க அனுமதியில்லை. பாதுகாப்பு குறைபாடுள்ளதாக கேப்ஸ்யூல் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஹிந்துக்களே கோ பேக்… கலிபோர்னியா கோவிலில் எழுதப்பட்ட வாசகம்!
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன?