ஸ்ரீ ராமரின் அவதார தினமான இன்று (ஏப்ரல் 17) ராம நவமி விழா பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அயோத்தி ராமர் கோவிலில் ராம நவமி:
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் பால ராமருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ராம நவமி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்வான சூரிய அபிஷேக மகோத்சவம் இன்று (ஏப்ரல் 17) நடைபெற்றது.
நண்பகல் 12.01 மணிக்கு கோவில் கருவறையில் இருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் நிகழ்வு நடைபெற்றது. பால ராமர் சிலையின் நெற்றியில் சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு சூரிய ஒளிக்கதிர் விழுந்ததது.
இந்நிகழ்வை அயோத்தியில் உள்ள பக்தர்கள் தெளிவாக காணும் வகையில் நகரம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.
அயோத்தி ராமர் கோவிலின் கருவறைக்குள் சூரிய ஒளி நேரடியாக நுழைய வழியில்லை. அதனால், கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் அடங்கிய ஒரு விரிவான வடிவமைப்பு மூலம் பால ராமருக்கு ‘சூரிய திலகம்’ நிகழ்வை நிகழ்த்தியுள்ளனர்.
https://twitter.com/autopsy_surgeon/status/1780489397651345601
மேற்கு வங்காளத்தில் ராம நவமி:
ராம நவமி விழாவையொட்டி மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் இந்து சாகரன் மஞ்ச் அமைப்பினர் சார்பாக இன்று (ஏப்ரல் 17) மாபெரும் ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவின் புர்ரா பஜார், சிலிகுரி, பராசத் ஆகிய இடங்களின் வழியாக இந்த மாபெரும் ஊர்வலம் நடத்தப்படுகிறது.
கும்பகோணத்தில் ராமநவமி:
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் ராமசாமி கோவிலில் இன்று (ஏப்ரல் 17) ராம நவமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இன்று மேள தாளம் முழங்க சீதாதேவி, ராமசாமி மற்றும் லட்சுமணர் ஆகியோர் விஷேச அலங்காரத்தில் எழுந்தருள தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராமநவமி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” : அண்ணாமலை திட்டவட்டம்!
கடைசி நாள் பிரச்சாரம் : மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!