குஜராத் பாலம் விபத்து: விசாரணை நடத்தும் உச்ச நீதிமன்றம்!

இந்தியா

குஜராத் மாநிலத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்தது குறித்த பொதுநல வழக்கு வரும் 14-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இன்று (நவம்பர் 1) தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள தொங்கும் பாலம் நேற்று முன் தினம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பாலத்தில் இருந்து ஆற்றில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் மோடி மோர்பிக்கு சென்று இன்று நேரில் சந்திக்க உள்ளார்.

மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம்!

இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் காந்திநகர் ராஜ்பவனில் இன்று காலை உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குஜராத்தில் நாளை துக்கம் அனுசரிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தேசிய கொடி மாநிலத்தில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி எதுவும் நடத்தப்படாது என்றும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

குஜராத் மாநிலத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்தது குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு வரும் 14-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

போட்டோ சூட் நடத்தவே மருத்துவமனைக்கு மோடி விசிட்: காங்கிரஸ், ஆம் ஆத்மி கடும் தாக்கு!

”இன்னைக்கு கனமழை பெய்யும்- வீட்டுக்குள் பத்திரமா இருங்க”: வெதர்மேன்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *