சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான நிபந்தனையை அமலாக்கத்துறைக்கு விதித்துள்ளது. இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சிறப்பு நீதிமன்றம் பணமோசடி புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகு, பண மோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) பிரிவு 19-ன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று (மே 16) தீர்ப்பளித்துள்ளது.
அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிரான தர்சிம் லால் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு,
“சிறப்பு நீதிமன்றம் பணமோசடி புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகு, பணமோசடி தடுப்புச் சட்டம் பிஎம்எல்ஏ பிரிவு 19-ன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்ய முடியாது
குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுத்து விசாரிக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
வழக்கில் முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதி கஸ்டடிக்கு அனுமதி வழங்கினால் மட்டுமே குற்றம்சாட்டப்பட்ட நபரை காவலில் எடுத்து விசாரிக்க முடியும்” என்று தீர்ப்பளித்தனர்.
இது அமலாக்கத்துறையின் அதிகாரத்தை பெருமளவு குறைப்பதாக இருக்கிறது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…