தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையர் நியமனங்களில் சீர்திருத்தங்களை கொண்டு வரக்கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஜோசப் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போது அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தது குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று (நவம்பர் 24) தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, “தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட ஐந்து பேரில் அருண் கோயல் மிகவும் இளையவர். அவரை எந்த அடிப்படையில் நீங்கள் தேர்வு செய்தீர்கள்?
விருப்ப ஓய்வு பெற்ற அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது எப்படி? அவர் விருப்ப ஓய்வு பெற்றது சாதாரண நடவடிக்கை தானா? தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது?” என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
செல்வம்
கால்பந்து மைதானத்தில் ஜப்பான் ரசிகர்கள் செய்த செயல்!
முத்துசாமி தீட்சிதர் பெற்ற வீணை: மகிழ்ச்சியில் மத்திய அமைச்சர்