பொதுநலனுக்காக அனைத்து தனியார் சொத்துகளையும் அரசு கையகப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 5) தீர்ப்பளித்துள்ளது.
1986-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு வீட்டு வசதி திட்டத்தில் பொது சீரமைப்புக்காக சில குறிப்பிட்ட தனியார் சொத்துகளை அரசு கையகப்படுத்தும் என்ற திருத்தத்தை மேற்கொண்டது.
இதனை எதிர்த்து 1992 ஆம் வருடம் மும்பையைச் சேர்ந்த தனியார் சொத்துகள் உரிமையாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்திருந்தது. இந்த வழக்கைக் கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த நிலையில்தான், பொதுநலனுக்காக அனைத்து தனியார் சொத்துகளையும் அரசு கையகப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும், ஒரு குறிப்பிட்ட தனியார் சொத்தை பொதுநலன் பயன்பாட்டிற்காக அரசு கையகப்படுத்த நினைத்தால், அந்த சொத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எந்த அளவுக்குத் தேவைப்படுகிறது, தனியாரிடம் இருப்பதால் பொதுநலனுக்கு எந்த விதமான பாதிப்புகளை அது ஏற்படுத்துகிறது என்பது போன்ற விவரங்களை விசாரித்துவிட்டுத் தான், அக்குறிப்பிட சொத்தை கையகப்படுத்த வேண்டுமா கூடாதா என்று அரசு முடிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த 9 நீதிபதிகளில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 8 நீதிபதிகள் தீர்ப்புக்கு ஆதரித்த நிலையில், நீதிபதி தூளியா தீர்ப்பில் இருந்து மாறுபட்டார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அமெரிக்க அதிபர் தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!
கோவை: 35 ஆண்டுகால பிரச்சனைக்கு மூன்று மணி நேரத்தில் தீர்வு கண்ட ஸ்டாலின்