உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பெயர் பரிந்துரைக்கப்படவுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில், மூத்த நீதிபதிகளாக டி.ஒய் சந்திரசூட், எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் மற்றும் அப்துல் நாசர் உள்ளனர்.
வரும் நவம்பர் 8ஆம் தேதியுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள யு.யு. லலித்தின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை இன்று பரிந்துரை செய்யவுள்ளார் தலைமை நீதிபதி யு.யு.லலித்.
இன்று காலை 10.15 மணி அளவில் அனைத்து நீதிபதிகளும் கூடும் நிகழ்வில் அதிகாரப் பூர்வமாக அதற்கான கடிதம் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற செகரட்டரி ஜெனரல் வீரேந்தர் குமார் பன்சால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விருப்பப்படி குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து நீதிபதிகளும் கூட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை கூடும் கூட்டத்தில் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி பரிந்துரைக்கவுள்ளதாக நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சி: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை