|

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் இன்று (ஜூலை 16) உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34. இந்த நிலையில் 2 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன.

இதனையடுத்து 2 காலியிடங்களுக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்தது. அதனை மத்திய அரசும் ஏற்றது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங் இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக D.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் பணியிட மாற்றம்!

காவிரி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தை நாட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts