ஆதாமின் பாலம் என்று அழைக்கப்படும் ‘ராம சேது பாலம்’ தமிழ்நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள பாம்பன் தீவிற்கும், இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னார் தீவுக்கும் இடையே உள்ள சுண்ணாம்புக் கற்களின் சங்கிலி தொடராக அமைந்துள்ளது.
இந்தப் பகுதியில் பொதுமக்கள் அதனை சுலபமாக பார்க்கும் வகையில் சுவர் எழுப்பப் பொதுநல மனுவை தனிநபர் சட்ட வாரியத் தலைவர் அசோக் பாண்டே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 3) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ”ஒரு கட்டுமான பணியை மேற்கொள்ள நீதிமன்றம் எவ்வாறு உத்தரவு பிறப்பிக்க முடியும் இவையெல்லாம் நிர்வாகத்தின் வேலை” என்று கூறினர்.
மேலும் கோரிக்கை வைக்க வேண்டுமென்றால் மத்திய அரசை அணுக வேண்டும் என்று கூறி, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவையும் ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்?: பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி!
”ஒன் 2 ஒன்”: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!