இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் பின்பற்றப்படும் தற்போதைய இடஒதுக்கீட்டு முறையை படிப்படியாக நீக்கி, அதற்கு பதிலாக மாற்று முறையைக் கொண்டு வர வேண்டும் என்று வழக்கறிஞர் சச்சின் குப்தா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று (ஜூலை 4) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்மா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “இந்த மனு அற்பமானது. இந்த பொதுநல வழக்கு நீதிமன்றத்தின் செயல்முறையை தவறாகப் பயன்படுத்தும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது மட்டுமில்லாமல், மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் அபராதம் செலுத்தியதற்கான ரசீதையும் 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வழக்கறிஞர் சச்சின் குப்தா சாதி அமைப்பை மறுவகைப்படுத்தக் கோரி தாக்கல் செய்த மனுவைத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்மா அமர்வு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
ஜெயலலிதாவின் புடவைகள், தங்க வைர நகைகள் : விஜிலன்ஸுக்கு பறந்த கடிதம்!