29 வார கருவைப் பாதுகாப்பாகக் கலைக்க முடியுமா என டெல்லி எய்ம்ஸ் இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 19) கேள்வி எழுப்பியுள்ளது.
லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பி.டெக் மாணவியின் கரு கலைப்பு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி. பர்திவாலா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, “மாணவி தற்போது காசியாபாத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கியுள்ளார். தனது 29 வார கருவை கலைக்க விரும்புகிறார்” என அந்த மாணவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், “மாணவி 29 வார கருவை சுமந்துகொண்டிருக்கும் இந்த நிலையில், அவரை எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதனை செய்வது அவசியம் என்று கருதுகிறோம்.
மனுதாரரின் உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லாத வகையில் கர்ப்பத்தைக் கலைக்க முடியுமா எனப் பரிசீலிக்க ஒரு மருத்துவ குழுவினரை அமைக்க எய்ம்ஸ் இயக்குநருக்கு உத்தரவிடுகிறோம்” என்று தெரிவித்தனர்.
எய்ம்ஸ் அறிக்கையை ஆய்வு செய்து வரும் ஜனவரி 23ஆம் தேதி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
பிரியா