அனைத்து பெண்களும் கருக்கலைப்பு செய்து கொள்ள உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 29) அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கருக்கலைப்பு விதிகளை ஒழுங்குப்படுத்துவது குறித்த விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “பெண்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு செய்துகொள்ள சட்டப்பூர்வமான அனுமதி உள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண், சிறுமிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டால், கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் செய்யப்படும் 60 சதவிகித கருக்கலைப்புகள் பாதுகாப்பற்றதாக உள்ளது. கருக்கலைப்புக்கான உரிமை என்பதை, திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம்.
கருக்கலைப்பு விதிகளில் திருமணமாகாத பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது.
திருமணத்திற்கு பிறகு மனைவி அனுமதியின்றி கணவன்மார்கள் உடலுறவில் ஈடுபட்டால், பாலியல் வன்கொடுமை என எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
கருக்கலைப்பு விதிகளில் திருமணமாகாத பெண்களை அனுமதிக்க மறுப்பது, அரசியலமைப்புக்கு எதிரானது.
திருமணமான பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல், அனைத்து பெண்களும் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
முக்கியமாக 20-24 வார கர்ப்பத்தை கலைப்பதற்கு, இந்திய அரசமைப்பு சட்டத்தில் இடம் உள்ளது.
கணவன்மார்களால் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்படும் மனைவிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் கணவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும்” என்று நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
செல்வம்
எடப்பாடி பொதுக்கூட்டம் : ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேர் கைது!
நானே வருவேன் : வெற்றி நடை போடுமா?