ஆதரவு நிலைப்பாடே இந்தியாவுக்கான சரியான தேர்வு: உக்ரைன் அமைச்சர்!

இந்தியா

தற்போது இந்தியா வந்துள்ள உக்ரைன் வெளியுறவுத்துறை துணை அமைச்சரின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு மட்டுமே இந்தியாவுக்கான சரியான தேர்வாக இருக்கும் என உக்ரைன் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

உக்ரைனின் வெளியுறவுத்துறை துணை அமைச்சரான எமின் தபரோவா நான்கு நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

கடந்த ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு வரும் முதல் அதிகாரபூர்வ பயணம் இதுவாகும்.

அவரது இந்தப் பயணத்தில், வெளியுறவுத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி, பாதுகாப்புத் துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரை சந்திக்க உள்ளார்.

மேலும் அவர் பிரதமர் மோடியைச் சந்தித்து உக்ரைனுக்கு வரும்படி அழைப்பு விடுக்க உள்ளதாகவும்,

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக, ஜி-20 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்க, இந்தியா அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு வருகை தந்த அவரை டெல்லியில் வெளிவிவகார அமைச்சகத்தின் மேற்கத்திய நாடுகளுக்கான செயலாளர் சஞ்சய் வர்மா சந்தித்து பேசினார்.

பின்னர், ‘எமின் தபரோவா வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், “முனிவர்கள், சாமியார்கள் மற்றும் குருக்கள் என பலரை பெற்றெடுத்த பூமியான இந்தியாவுக்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி.

Supporting Ukraine is the right choice

இன்றைய தினம், விஷ்வ குருவாக, உலகளாவிய ஆசிரியராக மற்றும் நடுவராக இருக்க இந்தியா விரும்புகிறது.

எங்களது விஷயத்தில், அப்பாவியான பாதிக்கப்பட்ட நபருக்கு எதிராக அராஜகத்தில் ஈடுபடும் நபரில், நாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என தெளிவாக படம் பிடித்து காட்டப்பட்டு உள்ளோம்.

உக்ரைனுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு ஒன்றே, உண்மையான விஷ்வ குருவுக்கான சரியான வாய்ப்பாக அமையும்’ என அவர் தனது பதிவில் தெரிவித்து உள்ளார். 

ஓராண்டுக்கும் மேலாக நீடித்து பலரை பலி வாங்கிய உக்ரைன் – ரஷ்யப் போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன.

போர் ஆரம்பித்ததில் இருந்து, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழியிலான முயற்சிகள் தீர்வு ஏற்பட வழிவகுக்கும் என்றும் அமைதிக்கான எந்தவொரு முயற்சியிலும் பங்காற்ற இந்தியா தயார் என்றும் இந்திய பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வருவது நினைவுகூரத்தக்கது.

ராஜ்

ஆன்லைன் சட்ட மசோதா ஒப்புதல்: ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக கண்டன பொதுக்கூட்டம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பைனாப்பிள் ஸ்குவாஷ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *