கர்நாடக மாநிலத்தில் அரசியல் தலைவர்கள், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு இளம் பெண்களை சப்ளை செய்து பாலியல் தொழிலின் மன்னனாக இருந்த சான்ட்ரோ ரவி என்பவரை குஜராத்தில் போலீஸ் கைது செய்துள்ளது.
மைசூரு மாவட்டத்தில் தொழிலதிபராக தன்னை அடையாளப்படுத்தி வந்தவர் சான்ட்ரோ ரவி. இவரது உண்மையான பெயர் கே.எஸ்.மஞ்சுநாத்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது 2-வது மனைவி மைசூரு விஜயநகர் போலீஸ் நிலையத்தில் சான்ட்ரோ ரவி, தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக புகார் அளித்தார்.
மேலும், அரசியல் தலைவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இளம் பெண்களை சப்ளை செய்வதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் அவர் பல பா.ஜ.க அமைச்சர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
மேலும் சான்ட்ரோ ரவி கட்டுக்கட்டாக பணத்துடன் இருக்கும் புகைப்படமும் வெளியானது. இந்த விவகாரம் கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுத்தது.
அரசியல் தலைவர்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆளும் பா.ஜனதாவினரை நோக்கி எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
கடந்த 12 நாட்களாக மைசூர் போலீசார் 6 தனிப்படையை அமைத்து தலைமறைவாக இருந்த ரவியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று குஜராத்தில் தலைமறைவாக இருந்த ரவியை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே சான்ட்ரோ ரவி பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சான்ட்ரோ ரவி இளம்பெண்களுடன் பழகி அவர்களை தனது வலையில் வீழ்த்தி திருமணம் செய்வார்.
பின்பு அதே பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
பல அரசியல் தலைவர்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் ரவியுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
தனக்கு பிரச்சனை வரும்போது அவர்கள் செல்வாக்கை பயன்படுத்தி தனக்கு எந்த பிரச்சனையும் வராமல் செல்வாக்குடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
அவருடைய பங்களாவிற்கு ஒரு முக்கிய அதிகாரி வந்தபோது ரவியின் இரண்டாவது மனைவியை பார்த்து தனக்கு இந்த பெண் வேண்டும் என கேட்டபோது அதற்கு ரவி மனைவி மறுப்பு தெரிவிக்க இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்பு தனது மனைவியை பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளியுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த அந்த பெண் தற்பொழுது ரவியின் ஒட்டுமொத்த ஜாதகத்தை ஊடகத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.
ரவி அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஏற்பட்ட தொடர்புகளைக் கொண்டு அரசு அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் வாங்கி கொடுத்துள்ளார்.
இதன் மூலம் கிடைத்த பணத்தில் பெங்களூரில் மைசூரு உள்ளிட்ட 6 நகரங்களில் சொகுசு பங்களாக்கள் ரவிக்கு உள்ளது.
சான்ட்ரோ ரவி கைது குறித்து செய்தியாளர்களிடம் மைசூரில் பேசிய கர்நாடக காவல்துறை கூடுதல் டிஜிபி (சட்டம் – ஒழுங்கு) அலோக்குமாா், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் கே.எஸ்.மஞ்சுநாத் (எ) ‘சான்ட்ரோ’ ரவியை மைசூரில் இருந்து சென்ற கா்நாடக போலீஸாா், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் கைது செய்துள்ளனா்.
அவருடன் சதீஷ், ராம்ஜி ஆகியோரையும் கைதுசெய்துள்ளனா். அவா்கள் உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, கா்நாடகத்திற்கு அழைத்து வரப்படுவாா்கள்.
2005ஆம் ஆண்டு குண்டா் சட்டத்தில் கைதாகியிருந்த ‘சான்ட்ரோ’ ரவி, பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தாா்.
அண்மைக்கால புகாா்களின் அடிப்படையில் ஜன.2ஆம் தேதியில் இருந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம்.
கா்நாடகத்தில் இருந்து தப்பி, கேரளம், மகாராஷ்டிரம் என தப்பிசென்ற ‘சான்ட்ரோ’ ரவியை குஜராத்தில் வெள்ளிக்கிழமை கா்நாடக போலீஸாா் கைதுசெய்துள்ளனா்.
இதற்காக போலீஸாரை பாராட்டுகிறேன். கா்நாடகத்திற்கு அழைத்து வந்தபிறகு, அவரிடம் விசாரணை நடத்தப்படும். அப்போது மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என்று கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
கலை.ரா
”தமிழ்நாடு” ஆளுநரின் பொங்கல் வாழ்த்து!
ஆளுநர் மீது முதல்வர் புகார்: குடியரசுத் தலைவர் எடுத்த நடவடிக்கை!