கடைசி நேர சிக்கல் : சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!!

Published On:

| By christopher

Sunitha Williams' 3rd space mission postponed!

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கடைசி நேர குளறுபடியால், சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் நாசாவில் பணியாற்றி வரும் நிலையில், ஏற்கனவே 2 முறை விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது மூத்த நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன், 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் 3ஆவது முறையாக விண்வெளிக்குச் செல்ல இருந்தார்.

அதற்காக இந்திய நேரப்படி இன்று (மே 7) காலை 8:04 மணிக்கு புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் எனப்படும் கென்னடி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் ஏவப்பட தயாராக இருந்தது.

இதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. மேலும் தேதி அறிவிக்கப்படாமல் வேறு ஒரு நாளில் ராக்கெட் ஏவப்படும் என நாசா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராக்கெட் ஏவப்படுவதற்கு சரியாக 90 நிமிடங்களுக்கு முன்பு, அட்லஸ் V ராக்கெட்டின் லான்ச் நிறுத்தப்பட்டது. ஆக்சிஜன் நிவாரண வால்வில் பிரச்சினை இருந்ததே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து ULA ஏவுதல் இயக்குனர் டாம் திட்டமிடப்பட்ட ஸ்டார்லைனர் விண்கல ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து ஸ்டார்லைனர் விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஜ் வில்மோர் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர். இதனை நாசாவும் உறுதிபடுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வேலைவாய்ப்பு : HAL நிறுவனத்தில் பணி!

தொடங்கியது 3வது கட்ட மக்களவை தேர்தல்… வாக்களித்த மோடி, அமித் ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment