கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்தார்.
கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு மத்திய அரசு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை அறிவித்தது.
ஆனால், விருது வழங்கும் விழாவில் நேரடியாக கலந்து கொள்ள முடியாத சூழல் காரணமாக அவ்விருது இந்திய தூதரகம் மூலம் சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை இன்று(டிசம்பர் 19) குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது குடியரசு தலைவர், உலக அளவில் இந்தியர்களின் திறமையை கொண்டு சென்றவர் சுந்தர் பிச்சை என புகழாரம் சூட்டியுள்ளார்.
அதே நேரத்தில் உலகளாவிய டிஜிட்டல் கல்வியை இந்தியாவில் முன்னிலைப்படுத்துமாறு சுந்தர் பிச்சையிடம் குடியரசு தலைவர் கேட்டுக்கொண்டதாக குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
குடியரசு தலைவர் உடனான சந்திப்பை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும் சுந்தர் பிச்சை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
கலை.ரா
ஹிஜாப்புக்கு எதிர்ப்பு – கைதான ஆஸ்கர் பட நாயகி : யார் இவர்?
இந்திய- சீன எல்லை மோதல் விவகாரத்தால் அமளி: எதிர்கட்சிகள் வெளிநடப்பு!