உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆசிரியையிடம் ஆபாசமாக நடந்துகொண்ட 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கிதாவுர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராத்னா இனயத்பூர் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் 27 வயதான ஆசிரியை பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று(நவம்பர் 27) அந்த ஆசிரியை கிதாவூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தான் பணியாற்றும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் தன்னிடம் அத்துமீறி நடந்துகொள்வதாகவும், தன்னைப்பற்றி அவதூறாகப் பேசி வருவதாகவும் புகாரில் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக மாணவர்களை பலமுறை எச்சரித்தும், பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் கூட எந்த பயனுமில்லை என்று அந்த ஆசிரியயை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 24 ஆம் தேதி பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் என்னிடம் ‘ஐ லவ் யூ’ என்று கூறி வரம்பு மீறினார்கள், அதை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பரப்பினார்கள் என்று ஆசிரியை போலீசில் புகார் அளித்தாஙர்.
இது தவிர, வகுப்பறைக்குள் அவர்கள் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலானது,” என்று அவர் புகாரில் கூறினார்.
சுமார் 16 வயதுடைய அதாஷ், கைஃப், அமன் ஆகிய மாணவர்கள் மற்றும் ஷகுபா என்ற பெண் மீது வழக்குப்பதிவு ஆபாசமான கருத்துகள், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளது.
நான்கு மாணவர்களும் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கலை.ரா
கடும் பனிப்பொழிவு: ரயில்கள் தாமதம்!
தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வானிலை அப்டேட்: உருவான புதிய ”சக்கரம்”