ஏஐ-யிலும் தெற்கு, வடக்கு பிரிவினையா? – பாய்ந்த ஷோஹோ ஸ்ரீதர் வேம்பு

Published On:

| By Kumaresan M

பெங்களூருவில் ஏ.ஐ மையம் அமைக்கப்படாதது குறித்து வடக்கு தெற்கு என்று கருத்து தெரிவித்துள்ள ஷோஹோ நிறுவனத்தின் சி.எப். ஓ மோகன்தாஸ் பாய் கருத்துக்கு அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஐஐடி கான்பூர், ஐஐடி ரோபார் , ஐஐடி டெல்லி மற்றும் ஏய்ம்ஸ் ஒருங்கிணைப்பு  மையத்தில்  ஏ.ஐ மையம் தொடங்கப்பட்டது. மத்திய கல்வி  அமைச்சர் தர்மேந்தர் பிரதான் இந்த மையங்களை திறந்து வைத்தார். முன்னதாக , இந்தியாவின் ஐ.டி ஹப் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் ஏ.ஐ மையம் திறக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் திறக்கப்படவில்லை.

;

வட இந்தியாவில் மட்டுமே அனைத்து மையங்களும் திறக்கப்பட்டதால் ஷோஹோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பிரபு பாய், இந்தியாவின் ஐ.டி ஹப் நகரமாக கருதப்படும் பெங்களூரு  புறக்கணிக்கப்பட்டது ஏன்? நீண்ட காலமாக என்.டி.ஏவுக்கு கர்நாடகா மக்கள்  ஓட்டளித்து வருகின்றனர். ஆனால், தென்னிந்தியாவை மத்திய அரசு மாற்றாந்தாய் மனதுடன் நடத்துகிறது. எங்களை மீண்டும் மீண்டும் புறக்கணிக்கிறீர்கள். இது சரியானது அல்ல என்று காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்.

ஷோஹோ தலைமை நிதி அதிகாரி பிரபு பாயின் கருத்து சமூகவலைத் தளத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில், இந்த மையங்களை எந்த எந்த இடங்களில் அமைக்க வேண்டுமென்று தீர்மானிக்கும் குழுவில் ஷோஹோ சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்புவும்  இடம் பெற்றிருந்தார்.  இவர், பிரபுபாயின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதர் வேம்பு  எக்ஸ் பக்கத்தில், இந்த விஷயத்தில் தெற்கு, வடக்கு என்கிற பேதம் வேண்டாம். தெற்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் அந்த குழுவில் இடம் பெற்றலவர்கள் பெரும்பாலானோர் தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள்.  அனைவரும் தனியார் துறையை சேர்ந்தவர்கள். அரசு இந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கவில்லை . தயவு செய்து மீண்டும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் வடக்கும் இல்லை தெற்கும் இல்லை என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ககன மார்கன்’!

”அதிமுக பிரிந்துவிட்டதுனு இனி சொல்லாதீங்க” : எடப்பாடி ஆதங்கம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share