வந்தே பாரத் ரயில்கள் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதல்களால் இந்திய ரயில்வேக்கு ரூ.55.60 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயில்கள் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதல்கள் தொடர்பாக மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சகம் எழுத்துபூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வந்தே பாரத் ரயில்களில் சில கல்வீச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2019, 2020, 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் (ஜூன் வரை), கல்வீச்சு சம்பவங்களில் வந்தே பாரத் ரயில்களுக்கு ஏற்பட்ட சேதத்தால் இந்திய ரயில்வேக்கு ரூ.55.60 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக கல்வீச்சில் ஈடுபட்ட 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயணிகளின் உயிரிழப்பு அல்லது திருட்டு/பயணிகளின் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கும் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. பயணிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்காகவும், குற்றவாளிகளால் சேதப்படுத்தப்பட்ட ரயில்வே சொத்துகளைச் சீரமைப்பதற்கும் மாவட்ட காவல்துறை மற்றும் சிவில் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ரயில்வே பாதுகாப்புப் படையில் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
ஆபரேஷன் சதி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ரயில் பாதையை ஒட்டிய மக்கள் வசிக்கும் பகுதிகளில், கல் எறிதல் மற்றும் அதன் விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து நடத்தப்படுகிறது. ரயில்வே சொத்துகளுக்கு சேதம் மற்றும் அழிவுக்கு வழிவகுக்கும் போராட்டத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருவதாக மக்களவையில் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகுக் கூழ் (ஆடி ஸ்பெஷல்)
Comments are closed.