வார இறுதியில் உச்சம்: இந்த பங்குகளை நோட் பண்ணுங்க!

இந்தியா

ஜூலை 18 வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு முதன்முறையாக 81,500 புள்ளிகளை எட்டி புதிய உச்சத்தை அடைந்தது, நிஃப்டி இன்ட்ராடே வர்த்தகத்தில் 24,800 ஐ தாண்டி வர்த்தகமானது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 627 புள்ளிகள் அதிகரித்து 81,522.5 என்ற சாதனையை எட்டிய பின்னர் 81,343 புள்ளியில் முடிந்தது. நிஃப்டி 188 புள்ளிகள் சதவீதம் உயர்ந்து 24,801 இல் முடிந்தது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் TCS, Bajaj Finserv, M&M, HUL, Infosys, HCL Tech, Tech M, SBI, Kotak Bank, Bharti Airtel, ITC, and ICICI Bank நிறுவன பங்குகள் 0.7% முதல் 3% வரை லாபத்தை கொடுத்து பங்கு விலை உயர்ந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

செயல்பாடுகளின் மூலம் வருவாய் ரூ.39,315 கோடியை ஈட்டியதாகவும், இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய ரூ.37,933 கோடியை ஒப்பிடுகையில் இது 3.6% உயர்வு என்று தெரிவித்துள்ளது.

மேலும், முதல் காலாண்டில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைக்கப்பட்ட லாபமாக ரூ.6,368 கோடி ஈட்டியதாக தெரிவித்துள்ளது இன்ஃபோசிஸ் நிறுவனம். வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு 1.86% உயர்ந்து ரூ.1,758.05 ரூபாய்க்கு வர்த்தகமானது.

விப்ரோ நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 2% குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். கடந்த மார்ச் காலாண்டில், விப்ரோ நிறுவனத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிகர லாபத்தில் ஆண்டுக்கு ஆண்டு 8% சரிந்து ரூ. 2,835 கோடியாக இருந்தது மற்றும் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 4% குறைந்து ரூ.22,208 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வணிக நிறுவனங்களின் தர மதிப்பீட்டு நிறுவனமான ICRA. அதானி போர்ட் (APSEZ) நிறுவன தற்போதைய தர மதிப்பீட்டான AA+/Stable இலிருந்து AAA/Stable ஆக உயர்த்தியுள்ளதாக தெரிவித்த நிலையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ் பங்கு NSE இல் ரூ 7.10 குறைந்து ரூ 1,491.95 இல் முடிந்தது.

Paytm நிறுவனத்தின் தாய் நிறுவனமான One 97 Communications நிறுவனத்தின் முதல் காலாண்டு வர்த்தக அடிப்படையில் ரூ. 1,013 கோடி முதல் ரூ. 840 கோடி வரை நிகர இழப்பை சந்திக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

தமிழ்நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பனீர் முதல் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமான மில்க்கி மிஸ்ட், அதன் விரிவாக்கத் திட்டங்களைத் தூண்டும் வகையில் பொதுச் சந்தைகளில் ஆரம்பப் பொதுப் பங்களிப்பை (IPO) பெறத் தயாராக உள்ளதாகவும் ரூ.1,500 முதல் ரூ.2,000 கோடி வரையிலான மூலதன நிதியை இதன் மூலமாக திரட்ட உள்ளதாக நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

துறைமுக சரக்கு கையாளுதலின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் துறைமுக ஆபரேட்டரான JSW Infrastructure நிறுவனம் கடந்த வியாழன் அன்று முதல் காலாண்டு முடிவுகளை அறிவித்தது.

அதன்படி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.3,201 கோடியை ஒப்பிடுகையில் லாபத்தில் கிட்டத்தட்ட 9 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.292 கோடி ரூபாயை ஈட்டியதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு 1.32% சரிந்து ரூ.336.10 ரூபாய்க்கு முடிவடைந்தது.

இந்த மாத இறுதிக்குள் IDBI நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் திடடத்தை செயல்படுத்த உள்ளத்தாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சரியான முதலீட்டாளர்கள் கிடைக்கும் பட்சத்தில் வங்கியின் பங்குகளை விற்பனை செய்வது இலகுவானது எனவும், IDBI வங்கி தன்னிடம் உள்ள 60.72% பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு 30.48 சதவீதமும் LIC நிறுவனம் 30.24 சதவீதமும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது‌

பொதுத்துறை நிறுவனமான பாங்க் ஆஃப் இந்தியா 10 ஆண்டுக்கான Infrastructure பத்திரங்களை மூலமாக மொத்தம் ரூ.5,000 கோடிக்கு 7.54% வட்டி விகிதத்தில் விற்க உள்ளதாக செபியில் தெரிவித்துள்ளது.

ஜூலை 19 வெள்ளிக்கிழமை வார இறுதி நாள் வர்த்தகத்தின் முதல் அமர்வில் சென்செக்ஸ், நிஃப்டி சாதனை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. காலை முதல் அமர்வில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 4% லாபத்தைக் கொடுத்தது.

JSW Steel, ICICI Lombard, JSW Energy, Indian Hotels, UltraTech, Wipro, Paytm, Nippon Life AMC, Patanjali Foods, :PVR Inox, Route Mobile, Tejas Networks,Persistent Systems, Tata Technologiues, L&T Technology Services, South Indian Bank, Dalmia Bharat, JSW Infra உள்ளிட்ட நிறுவனங்கள் முதல் காலாண்டு முடிவுகளை இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்க உள்ளதால் இந்நிறுனங்களின் பங்குகள் சந்தை வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Infosys, Dalmia Bharat, Havells and ONGC நிறுவன பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.

-மணியன் கலியமூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கூட்ட நெரிசலில் 121 பேர் பலி: “விதியை யாராலும் மாற்ற முடியாது” – போலே பாபா சாமியார்

2024 ஆடி மாத (17.7.24- 16.8.2024) நட்சத்திரப் பலன்கள்! மூலம் முதல் ரேவதி வரை!

2024 ஆடி மாத (17.7.24- 16.8.2024) நட்சத்திரப் பலன்கள்! மகம் முதல் கேட்டை வரை!

மாரி செல்வராஜின் “வாழை”… “தென்கிழக்கு தேன்சிட்டு” முதல் சிங்கிள் எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *