நேற்று (மே 21) செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 52.63 புள்ளிகள் குறைந்து 73,953.31 புள்ளியிலும். தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 27.05 புள்ளிகள் குறைந்து 22,529.05 புள்ளியில் முடிவடைந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பவர் கிரிட் கார்ப்பரேஷன், டெக் மஹிந்திரா மற்றும் என்டிபிசி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா, டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ் மற்றும் எஸ்இஇசட் ஆகிய பங்குகள் அதிக லாபம் ஈட்டின.
அதேநேரத்தில் நெஸ்லே இந்தியா, மாருதி சுசுகி இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் விலை குறைந்தன.
நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் $5 டிரில்லியன் மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. BSEல் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மொத்த சந்தை மூலதனம் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் முதல் முறையாக $5 டிரில்லியன் மைல் கல்லை எட்டியது.
2023-24 நிதியாண்டுக்கான நான்காவது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ள நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டுதல் மற்றும் பராமரிப்பு நிறுவனமாக கொச்சின் ஷிப்யார்டு. நேற்று செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பங்குகள் 14 சதவிகிதம் உயர்ந்தது மட்டுமல்லாமல் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது.
கொச்சின் ஷிப்யார்ட்ஸின் பங்குகள் காலை தொடக்கத்தில் 1,489 க்கு திறக்கப்பட்ட வேளையில் 14.95 சதவீதம் உயர்ந்து 52 வாரங்களில் புதிய உச்சமாக 1696.80ஐ எட்டியது, அதேநேரத்தில் இதன் பங்குகள் பிஎஸ்இயில் 10.30 சதவீதம் உயர்ந்து 1,636.70 ரூபாய் வரை உயர்ந்து வர்த்தகமானது.
நான்காவது காலாண்டில் வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் நிகர லாபமாக 78.66% அதிகரித்து 38.3 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்றைய வர்த்தகத்தில் வீல்ஸ் இந்தியாவின் பங்குகள் ஏறக்குறைய 20% உயர்ந்தன.
ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் 23-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 113.66 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நிறுவனம் நான்காம் காலாண்டு லாபமாக 36.53 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
ஆயில் இந்தியா நிறுவனம் நான்காவது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 17.8% அதிகரித்து 2,332.94 கோடி ரூபாய் ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
ஜேகே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நான்காவது காலாண்டில ஒருங்கிணைந்த நிகர லாபம் 56 சதவீதம் உயர்ந்து 169.33 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் சவூதி அரேபியாவின் அரம்கோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் அதன் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 12 சதவீதம் அதிகரித்தது.
தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 26 சதவீதம் அதிகரித்து மே 11 நிலவரப்படி 11.94 லட்சம் கோடியைத் கொண்டுள்ளதாக சமீபத்திய பிஎஃப்ஆர்டிஏ தரவு தெரிவித்துள்ளது.
இன்று (மே 22) புதன் கிழமை காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏறு முகத்துடன் தொடங்கியது.
Maruti Suzuki, Wipro, Bajaj Finserv Infosys, TCS, HCL Technologies, HDFC Bank, Jio Financial, Reliance Industries, Tata Consumer Products, HUL, Axis Bank, Tech Mahindra, M&M, Vodafone Idea, Bioconstries, Godre ONG Infosys ஆகிய நிறுவனங்கள் மார்ச் 31, வரையிலான நான்காவது காலாண்டிற்கான முடிவுகளை ஏற்கனவே அறிவித்ததால், இந்த பங்குகள் தற்போது பங்குச்சந்தையில் அதிக அளவில் வர்த்தகமாகி வருகிறது.
IRCON, BHEL, Galaxy Surfactants, Sheela Foam, Action Construction, Eris Lifesciences, Gulshan Polyols போன்றவற்றின் பங்குகள் புதன்கிழமை (மே 22) கவனம் செலுத்தும் என்று கணிக்கின்றனர்,
மேற்கண்ட நிறுவனங்கள் தங்கள் Q4 FY24 வருவாய் அறிக்கையை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் BHEL, BPCL, JSW Steel, JB Pharma, HCL Tech, LTI Mindtree ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இன்றைய தின வர்த்தகத்தில் கவனிக்கப்படும் பங்குகள் பட்டியலில் உள்ளதாக தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
Grasim Industries, Nykaa, Jubilant Foodworks, ITC, Page Industries, Hindalco Industries, Ashok Leyland, Hindalco Industries நிறுவனங்களின் காலாண்டு முடிவு அறிவிப்புகள் இந்த வாரம் வெளிவர உள்ளதால் இந்த பங்குகள் சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான Sun Pharmaceutical Industries மற்றும் Grasim Industries, Power Grid Corporation, FSN E-Commerce Ventures (Nykaa), One 97 Communications (Paytm), Max Healthcare Institute, Torrent Power, Petronet LNG, New India Assurance, Jubilant Foodworks, Metro Brands, Gland Pharma, Sundram Fasteners, Ramco Cements, HEG, Avanti Feeds, Indigo Paints, GMM Pfaudler, DB Corp., Teamlease Services, Ashoka Buildcon, PG Electroplast, Kaveri Seeds, Gujarat Pipavav Port, Garden reach Shipbuilders, Minda Corp., Star Cement ஆகிய நிறுவனங்கள் 2023-24 நிதியாண்டிற்கான Q4 காலாண்டு முடிவுகளை மே 22 புதன்கிழமை இன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
முன்னணி FMCG நிறுவனங்களில் ஒன்றான,டாடா நுகர்வோர் தயாரிப்புகள் நிறுவனம் ஈக்விட்டி பங்கிற்கு ரூ.7.75 ஈவுத்தொகையை வழங்க வாரியக் குழு பரிந்துரைத்துள்ளது என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
–மணியன் கலியமூர்த்தி
மீண்டும் மணல்… தொடங்கியது பேரம்!
9999… ஃபேன்சி பதிவெண்ணுக்கு ரூ.25.5 லட்சம்!