குஜராத்தில் பார்ட்டி வைத்த இளைஞரின் ஆசன வாயில் அவரது நண்பர்கள் ஸ்டீல் டம்ளரை சொருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான கிருஷ்ணா ரௌத். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளார்.
இரவு முழுவதும் நடந்த பார்ட்டியில் போதையின் உச்சத்திற்கு சென்ற நண்பர்கள் கிருஷ்ணாவின் ஆசனவாயில் மது குடிக்க பயன்படுத்திய இரும்பு ஸ்டீல் டம்ளரை சொருகியுள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்த வலி!
போதையில் இருந்த கிருஷ்ணாவுக்கு அது ஏதும் தெரியாத நிலையில், அடுத்த நாளில் இருந்து வயிற்று வலியால் துடித்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து வெளியே சொல்ல வெட்கப்பட்ட அவர் தனது குடும்பத்தினரிடம் கூட தெரிவிக்கவில்லை.
ஆனால் வலி அதிகரித்து கொண்டே வந்ததால், சூரத்தில் இருந்து புறப்பட்டு தனது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு சென்றார்.
அங்கும் தொடந்து வலி அதிகரித்த நிலையில், வயிற்றில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிருஷ்ணாவை அவரது உறவினர்கள் பெர்ஹாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அந்த ரிப்போர்ட்டில் அவரது குடலுக்குள் ஒரு ஸ்டீல் டம்ளர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அறுவை சிகிச்சையால் நீக்கம்!
அதனைதொடர்ந்து கிருஷ்ணாவின் வயிற்றுக்குள் இருந்த டம்ளரை மலக்குடல் வழியாக எடுக்க மருத்துவர்கள் முயன்றனர். எனினும் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது.
இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே டம்ளரை எடுக்க முடியும் என்று அவருக்கு அறிவுறுத்தினர்.
இதனையடுத்து மருத்துவமனையின் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் பேராசிரியர் சரண் பாண்டாவின் ஆலோசனையின் பேரில், உதவிப் பேராசிரியர் சஞ்சித் குமார் நாயக், டாக்டர் சுப்ரத் பரல், டாக்டர் சத்யஸ்வரூப் மற்றும் டாக்டர் பிரதீபா ஆகியோர் அடங்கிய டாக்டர்கள் குழு அறுவை சிகிச்சை செய்தனர்.
அவர்கள் குடலை வெட்டி ஸ்டீல் டம்ளரை அகற்றினர்.
10 நாட்களாக அவதிப்பட்ட வந்த இளைஞர் கிருஷ்ணா தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வருவதாகவும்,
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
நினைவில் கொள்ளுங்கள் குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
போலி போலீஸ் நிலையம்: 8 மாதத்திற்கு பிறகு கண்டுபிடித்த நிஜ போலீஸ் – சிக்கியது எப்படி?