இந்தியாவின் மொத்த ஜி.டி.பியில் 30 சதவிகிதம் கொடுக்கும் தென் மாநிலங்கள்… தமிழகத்தின் பங்கு எவ்வளவு?

இந்தியாவின் மொத்த ஜி.டி.பியில் ( மொத்த உள்நாட்டு உற்பத்தி) 30 சதவிகிதத்தை தென்மாநிலங்கள் வழங்குகின்றன.

இது குறித்து பிரதமரின் பொருளாதார ஆலோசனை பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ”தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா , ஆந்திரா , தெலங்கானா மாநிலங்களின் பங்களிப்பு வெகுவாக உயர்ந்துள்ளன.

ஒரு காலத்தில் பெருமளவு ஜி.டி.பி வழங்கிய மேற்கு வங்க மாநிலம் பின்தங்கியுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு வரை தென் மாநிலங்களின் தனிநபர் வருவாய் தேசிய வருவாயை விட குறைந்து இருந்தது. ஆனால், 1991 ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கத்துக்கு  பிறகு, தென்மாநிலங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன.

2024 ஆம் ஆண்டு தென்  மாநிலங்களின் ஜி.டி.பி பங்களிப்பு 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தமிழகம் தொழில்துறையிலும் கர்நாடகம் ஐ.டி துறையிலும் கோலோச்சுகின்றன. கடந்த 2014 ஆம் ஆண்டு உருவான தெலங்கானா மாநிலமும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

ஒரு காலத்தில் ஜி.டி.பியில் 10.5 சதவிகிதம் வழங்கி வந்த மேற்கு வங்கத்தின் பங்களிப்பு 5.6 ஆக குறைந்து விட்டது. கடந்த 20 வருடங்களாக மேற்கு வங்க அரசின் தொழில்துறை கொள்கைகளும் அரசியல் நிலவரமும் தொழில்துறையில் அந்த மாநிலத்தை சரிவை நோக்கி கொண்டு  சென்றுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவிகிதத்தை வழங்கி வந்த மகராஸ்டிராவின் பங்களிப்பு 2024 ஆம் ஆண்டு 13.3 சதவிகிதமாக குறைந்து போயுள்ளது.

தென் மாநிலங்களில் தமிழகம் 8.7 சதவிகிதம், கர்நாடகம் 8.2 சதவிகிதம், கேரளா 3.8 சதவிகிதமும் ஜிடிபி பங்களிப்பை வழங்கியுள்ளன. ஒருங்கிணைந்த ஆந்திராவின் ஜி.டிபி பங்களிப்பு 9.7 சதவிகிதமாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: காலை 11 மணி வாக்கு நிலவரம் என்ன?

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மகம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts