கும்பமேளா: 5 நட்சத்திர டெண்டில் தங்க ஒரு நாள் ரேட் எவ்வளவு தெரியுமா?

Published On:

| By Minnambalam Login1

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி மகா சங்கராந்தி முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா, 45 நாட்கள் நடைபெற உள்ளது.

இதையொட்டி 75 நாடுகளில் இருந்து 45 கோடி பக்தர்கள் பிரயாக்ராஜ் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை வரவேற்கும் வகையில் விரிவான ஏற்பாடுகளை உ.பி. அரசும் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகமும் செய்து வருகின்றன.

பக்தர்கள் தங்குவதற்கு 2 ஆயிரம் டெண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்துக்கு டெண்ட் சிட்டி என்றே பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்த டெண்டுகளில் தங்க நாள் ஒன்றுக்கு குறைந்தது 1,500 கட்டணம் வசூலிக்கப்படும்.

ஐந்து நட்சத்திர வசதிகள் கொண்ட டெண்டுகளில் தங்க ஒரு நாள் கட்டணம் 35 ஆயிரம் ஆகும். இந்த டெண்டுகள் வைஃபை, இரண்டு படுக்கைகள், ஷோபா, கீசர்ஸ், சாப்பிடும் அறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

கூடுதலாக கங்கை , யமுனை நதிகளை பார்க்கும் வகையில், இந்த டெண்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். கும்பமேளாவில் பங்கேற்க விரும்புபவர்கள் UPSTDC website or the Mahakumbh app வழியாக புக்கிங் செய்து கொள்ளலாம்.

அனுமதிக்கப்பட்டவர்களை விட கூடுதலாக ஒருவர் தங்க வேண்டுமென்றால் கூட 4 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும்.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை இந்த டெண்டுகள் பயன்பாட்டில் இருக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கும்பமேளா இந்திய பண்பாட்டை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

பி.வி சிந்துவுக்கு திருமணம்… மணமகன் யார் தெரியுமா?

போதை பழக்கத்தை தடுக்க புதிய திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel