மாநில அரசு தொலைக்காட்சி: ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை!

இந்தியா

மாநில அரசுகள் தனியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு அல்லது விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது.

தகவல் தொடர்பு உரிமங்களை வழங்குவதற்கான சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட அமைப்பாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளங்குகிறது.

state governments cannot enter into broadcasting on their own

மாநில அரசுகள் தனியார் துறையுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தால் நிதி அளிக்கப்படும் நிறுவனங்களை ஒளிபரப்பு துறையில் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று 2021-ஆம் ஆண்டு டிராய் பரிந்துரைத்தது.

அதன் அடிப்படையில் மாநில அரசுகள் தனியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் மாநில அரசுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பு பிரசார் பாரதி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

state governments cannot enter into broadcasting on their own

மேலும் ஒளிபரப்பு விநியோகத்தில் ஈடுபடும் மாநில அரசுகள் டிசம்பர் 31, 2023-க்குள் அதிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .

இந்த நடவடிக்கை அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், மாநில அரசுகளின் தொலைக்காட்சி விநியோகத்தால், தமிழ்நாட்டின் கல்வி தொலைக்காட்சி, அரசு கேபிள் மற்றும் ஆந்திர மாநிலத்தின் ஐபி டிவி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் பிரசார் பாரதிக்கும் மாநில அரசுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று டிராய் தெரிவித்துள்ளது.

செல்வம்

டி20 உலகக் கோப்பை: சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தொடங்குகிறது!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *