suchana seth tried to commit suicide
தன்னுடைய 4 வயது மகனை கொலை செய்தது ஏன்? என பெண் அதிகாரி சுசனா சேத் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த ‘மைண்ட்புல் ஏஐ லேப்’ ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் CEO சுசனா சேத் (39). தன்னுடைய நான்கு வயது மகனைக் கொலை செய்த குற்றத்திற்காக போலீசார் இவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் கைதான சுசனா, தற்போது கோவாவுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். சுசனா வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அவரை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் சுசனா சேத் தற்போது பல்வேறு உண்மைகளைத் தெரிவித்து இருக்கிறார்.
அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு வெங்கட் ராமன் என்பவரை சுசனா திருமணம் செய்துள்ளார். 2019-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சுசனா-வெங்கட் ராமன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2022-ம் ஆண்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி இருவரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இதற்கிடையே ஒவ்வொரு ஞாயிறு அன்றும் வெங்கட் ராமன் தன்னுடைய மகனுடன் நேரம் செலவு செய்யலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதை சுசனா விரும்பவில்லை. மகனை, கணவர் வந்து பார்ப்பதை விரும்பாமல் தான் கோவாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஜனவரி 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜனவரி 6 சனிக்கிழமை அன்றே மகனுடன் வடக்கு கோவாவுக்கு சென்று அங்கு அறை எடுத்துத் தங்கியுள்ளார்.
மகனை தலையணையை வைத்து அழுத்திக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்வதற்காக சுசனா முயன்றுள்ளார்.
அந்த முயற்சியில் கத்தியைப் பயன்படுத்திய போது தான் படுக்கை விரிப்புகளில் ரத்தக்கறைகள் பட்டிருக்கிறது. இதைப்பார்த்து தான் ஊழியர் நிர்வாகத்துக்குத் தெரிவித்து, அவர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இந்தோனேசியாவில் இருந்த வெங்கட்ராமன் விஷயம் கேள்விப்பட்டு இந்தியா வந்தார். அவரின் ஒப்புதலை அடுத்து மருத்துவமனையில் இருந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நான்கு வயது மகனைக் கொன்று… நாடகமாடிய பெண் அதிகாரி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
நான்கு வயது மகனை கொன்ற பெண் CEO… விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்!
suchana seth tried to commit suicide