ஏர்டெல்லுடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தம்: இணைய சேவைக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Published On:

| By Kumaresan M

ஏர்டெல் நிறுவனம் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்குடன் இணைந்து இன்டெர்நெட் சேவையை இந்தியாவில் வழங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு பக்கத்து நாடான பூடானில் ஸ்டார்லிங்க் சேவை இருக்கிறது. இந்தியாவின் அருகில் வேறு எந்த பக்கத்து நாட்டிலும் ஸ்டார்லிங்க் சேவை கிடையாது. Starlink internet in india

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இன்டெர்நெட் சேவை கட்டணம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ஸ்டார்லிங்க் இன்டெர்நெட் இணைப்புக்கு தேவையான தொழில்நுட்ப கருவிகளை நிறுவவே ரூ.25,000-35,000 வரை ஆகலாம். மாத கட்டணம் ரூ.5,000-7,000 வரை இருக்கலாம் .

இந்தியாவில் 6.44 லட்சம் கிராமங்களில் 6.15 லட்சம் கிராமங்களுக்கு 4G சேவை மட்டுமே கிடைக்கிறது. 5G தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க ஆப்டிக் ஃபைபர் கேபிள்களும், டவர்களும் அமைக்க வேண்டியது உள்ளது. செலவு நிறைய ஆகுமென்பதால் டெலிகாம் நிறுவனங்களால் கிராமப்புறங்களுக்கு 5 ஜியை கொண்டு சேர்க்க முடியவில்லை.

ஆனால், ஸ்டார்லிங்க் மூலம் இன்டெர்நெட் இணைப்பை பெற செல்போன் டவர் அவசியமில்லை. வீட்டு மாடியில் சிறிய ஆண்டனா பொருத்தி செயற்கைக்கோள் வழியாக 25 Mbps முதல் 220 Mbps வரை இணைய வசதியை பெற்று விடலாம்.Starlink internet in india

இதற்காக, ஏர்டெல் நிறுவனத்துடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இனிமேல், ஏர்டெல் ரீடெய்ல் ஷாப்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களும் கிடைக்கும்.கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் இணைய சேவை வழங்க ஸ்டார்லிங்க் அனுமதி பெற்றுள்ளது.

இணைய சேவையை தொடங்க மத்திய அரசு ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு விரைவில் அலைக்கற்றையை ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் உள்ளது. முதல் கட்டமாக பள்ளிகள், மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு ஸ்டார்லிங்க் இணைய இணைப்பு வழங்கப்படும்.

இது குறித்து ஏர்டெல் எம்.டி கோபால் விட்டல் கூறுகையில், இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் மலிவான விலையில் இணைய சேவை வழங்குவதுதான் எங்களின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இணைய சேவை வழங்குவது தொடர்பாக எலான் மஸ்க், பிரதமர் மோடியை பல முறை சந்தித்து பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share