இந்தியாவில் பிறந்த லட்சுமண் நரசிம்மன் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (செப்டம்பர் 1) ஆம் தேதி பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கு முன்பு அவர் ரெக்கிட் பென்கிசரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவிவகித்தார்.
அதில் இருந்து விலகி அக்டோபர் 1 ஆம் தேதி அமெரிக்காவை தலைமை அலுவலகமாகக் கொண்ட பன்னாட்டு காஃபிஹவுஸ் என்று அழைக்கப்படும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்.
எஃப்எம்சிஜி துறையில் அனுபவம் வாய்ந்த நரசிம்மன், அக்டோபர் மாதம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சேர லண்டனில் இருந்து சியாட்டிலுக்கு இடம் பெயர்ந்தார்.
இவர் ஆரம்பத்தில் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஹோவர்ட் ஷுல்ட்ஸுடன் நெருக்கமாக பணியாற்றினார், இந்நிலையில், லட்சுமன் நரசிம்மன் தலைமைப் பொறுப்பை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ஏற்பார் என்று கூறப்பட்டது.
லட்சுமண் நரசிம்மன் உலகளாவிய நுகர்வோர் எதிர்கொள்ளும் பிராண்டுகளை வழிநடத்தி ஆலோசனை வழங்குவதில் ஏறக்குறைய 30 வருட அனுபவம் உடையவர்.
இவர் செப்டம்பர் 2019 இல் ரெக்கிட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சேர்ந்தார், பின்பு அந்நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் அடித்தள திறன்களை வெற்றிகரமாக மாற்றி அமைத்தார்.
Fast-moving consumer goods என்று அழைக்கப்படும் டெட்டால், லைசோல், ஹார்பிக், டியூரெக்ஸ், வீட் போன்ற பிரபலமான பிராண்டுகளை வழிநடத்துவதில் திறன் வாய்ந்தவராக நரசிம்மன் இருக்கிறார்.
ரெக்கிட்டில் சேருவதற்கு முன்பு, நரசிம்மன் 2012 முதல் 2019 வரை பெப்சிகோவில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
இதில் உலகளாவிய தலைமை வணிக அதிகாரி (COO), லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா செயல்பாடுகளின் CEO மற்றும் லத்தீன் அமெரிக்காவின் CEO ஆகிய பதவிகள் அடங்கும்.
பெப்சிகோவில் பணியாற்றுவதற்கு முன்பு இவர் மெக்கின்சி & கம்பெனியின் இயக்குனராக 1993 முதல் 2012 தொடர்ந்து 19 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
லட்சுமன் நரசிம்மன் 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி புனேவில் பிறந்தார்.
புனேவில் உள்ள பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள லாடர் இன்ஸ்டிட்யூட்டில் முதுகலை ஜெர்மன் பட்டம் மற்றும் வார்டன் பள்ளியில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலை பட்டமும் ,பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நிதியில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.
ரெக்கிட் நிறுவனம் அதன் CEO பதவியில் இருந்து லக்ஷ்மண் நரசிம்மன் விலகுவதாக செப்டம்பர் 1 ஆம் தேதி அறிவித்தநிலையில்,
தற்போது உலகின் காபி விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
இவருக்கு இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார் , அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , துளித் தண்ணீர் சுனாமியாக மாறியது.
உலகின் மிகப் பிரபலமான நிறுவனங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகளை நியமிப்பது இப்போது தடுக்க முடியாத நிலையாக உருவாகியுள்ளது. சர்வதேச போர்டுரூம்கள் அவற்றை ‘பாதுகாப்பான’ தலைமைத்துவமாக கருதுகின்றன என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பேடிஎம், கேஷ்ஃபிரி, ரேசார்பே அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!