இந்தியா உட்பட 7 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உலகில் பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்று இலங்கை. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக 7 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் இலங்கைக்கு வரலாம் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இலவச விசாக்களை மார்ச் 31 வரை உடனடியாக வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Cabinet approves issuing of free visas to India, China, Russia, Malaysia, Japan, Indonesia & Thailand with immediate effect as a pilot project till 31 March –
— M U M Ali Sabry (@alisabrypc) October 24, 2023
5 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க முந்தைய அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரைத்திருந்ததாக சுற்றுலாத் துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் 7 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பாஜக குழுவில் திமுக அமைச்சருக்கு வேண்டியவர்!
’போராட்டம் வாபஸ்’: ஆம்னி பேருந்துகள் இன்று வழக்கம்போல் இயங்கும்!