இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(நவம்பர் 14) மாலை முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர் இருக்கைகள் உள்ளது. இதில் 195 உறுப்பினர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையின் அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ள 29 உறுப்பினர் இருக்கைகள், ஒவ்வொரு கட்சிகள் பெறுகிற வாக்குகளின் அடிப்படையில் அவர்களுக்கிடையே பிரித்துக்கொடுக்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாகப் போட்டியிட்ட அநூர குமார திசாநாயகே வெற்றிபெற்றார். அவர் வெற்றிபெற்றால் மக்கள் நலனுக்காகப் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதனை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வேண்டும்.
ஆனால் நாடாளுமன்றத்தில் வெறும் 3 தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள். அதனால் செப்டம்பர் மாத அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் நாடாளுமன்றத்தைக் கலைத்தார் திசநாயக்கே.
இந்த நிலையில்தான் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் திசநாயக்கேவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு எதிராக, அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவின் சமகி ஜன பலவேகயா கூட்டணி போட்டியிட்டது.
இந்த தேர்தலுக்காக சுமார் 13,400 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. 196 நாடாளுமன்ற சீட்களுக்காக 8,821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இலங்கை தேர்தல் ஆணையம் 65% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. வாக்குகள் இன்று இரவுக்குள் எண்ணப்பட்டு முடிவுகள் நாளை வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
எம். பி – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மருத்துவர் பாலாஜிக்கு கத்திக்குத்து: போராட்டத்தில் கோஷமிட்ட பிரேமலதா