Sri Lanka visa-free entry

விசா இன்றி இலங்கைக்குச் சுற்றுலா செல்லலாம்!

இந்தியா

இந்தியா உட்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குச் சுற்றுலா வருவதற்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும், ஆண்டுதோறும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாகவும் விளங்குகிறது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வனவிலங்குகள் சரணாலயங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், உள்நாட்டு கலாச்சாரம் ஆகியவற்றைக் காண வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகிறார்கள்.

தற்போது இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நற்செய்தியாக இந்தியா, இங்கிலாந்து உட்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குச் வருவதற்கு விசா தேவையில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஜகஸ்தான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், இந்தோனேசியா, ரஷ்யா, நியூசிலாந்து, ஓமன், கத்தார், தென் கொரியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, தாய்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையானது வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ஆறு மாதங்கள் வரை விசா இல்லாமல் இலங்கையில் இருக்கலாம் என்றும் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாரின் ஃபெர்னார்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசு ஊழியர்களாக்க வேண்டும் : அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை!

பியூட்டி டிப்ஸ்: அமோனியா ஃப்ரீ (Ammonia Free) ஹேர் டை ஆரோக்கியமானதா?

டாப் 10 நியூஸ் : தேசிய விண்வெளி தினம் முதல் கொட்டுக்காளி, வாழை ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு கொத்தமல்லி கார அடை

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *