இலங்கையில் தற்போது உணவு பற்றாக்குறை மோசமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
1948இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், கடந்த ஆண்டு முதல் பணவீக்கம், மின் தடைகள் மற்றும் எரிபொருள் விநியோகம் போன்றவற்றை சமாளித்து வருகிறது.
விலையேற்றம், உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு எதிராக பல மாதங்களாக நடைபெற்ற போராட்டங்கள் ஜூலை மாதம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சேவை பதவியில் இருந்து விலக வழிவகுத்தது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையில் தற்போது உணவு பற்றாக்குறை மோசமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளதுடன்,
அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை 34 லட்சமாக இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.
இலங்கையில் உள்ள 2 கோடியே 20 லட்சம் மக்கள்தொகையில் 17 லட்சம் மக்களுக்கு உதவி தேவைப்படுவதாக ஜூன் மாதம் ஐ.நா மதிப்பிட்டு இருந்தது.
தொடர்ச்சியான இரண்டு பருவகால மோசமான அறுவடை, அந்நிய செலாவணி தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் தற்போது உணவு பற்றாக்குறை மோசமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
-ராஜ்
நான் நட்சத்திரம் இல்லை: லவ் டுடே இயக்குனர் நெகிழ்ச்சி பதிவு!
கிச்சன் கீர்த்தனா : மட்டர் பனீர்