புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாறியுள்ள சிறப்பு கூட்டத் தொடரில் இன்று (செப்டம்பர் 19) மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஐந்து நாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று பழைய கட்டிடத்தில் தொடங்கியது. அப்போது 75 ஆண்டு கால பாராளுமன்ற சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள் குறித்து விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடவடிக்கைகள் நடைபெற உள்ளது.
இனி புதிய கட்டிடம் தான் ’இந்தியாவின் நாடாளுமன்றம்’ என்று மக்களவை செயலகம் இன்று அரசிதழில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இட ஒதுக்கீடு மசோதா எங்களுடையது!
இதற்கிடையே நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 1996ஆம் ஆண்டுமுதல் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 2010-ம் ஆண்டு மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேறியது. எனினும், மக்களவையில் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்போது இம்மசோதாவுக்கு மோடி அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ”மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது” என்று தெரிவித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த மசோதா, சிறப்பு கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெறும் சிறப்பு கூட்டத்தொடருக்காக மக்களவை மதியம் 1.15 மணிக்கும், மாநிலங்களவை மதியம் 2.15 மணிக்கு தொடங்குகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் ‘அஸ்வின்’.. அதிரடி அறிவிப்பு!