தென் கொரியாவின் 2வது பெரிய விமான விபத்து : பலி எண்ணிக்கை 174 ஆக உயர்வு!

Published On:

| By christopher

தென் கொரியாவில் ஜெஜு விமானம் இன்று (டிசம்பர் 29) காலை தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 174ஆக உயர்ந்துள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் ஆறு விமான ஊழியர்களுடன் ஜெஜு ஏர் விமானம் 7C2216 தென்கொரியா நோக்கி இன்று அதிகாலை புறப்பட்டது.

இந்த விமானமானது தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9.03 மணியளவில் தரையிறங்க முயன்றது. ஆனால் ஓடுபாதையில் சறுக்கியபடி வேகமாக சென்று விமான நிலைய சுற்றுச்சுவரின் மீது மோதியதில் விமானம் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக மீட்புப் பணியில் 32 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஒரு பணியாளர் மற்றும் ஒரு பயணி என இருவர் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில், இதுவரை 174 பேர் உயிரிழந்ததாக தேசிய தீயணைப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். லேண்டிங் கியரில் ஏற்பட்ட பழுது காரணமாக விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரியன் ஏர்லைன் விமானம் 801

2வது பெரிய விமான விபத்து!

இது தென் கொரியாவின் விமான வரலாற்றில் மிக மோசமான 2வது விமான விபத்தாக கருதப்படுகிறது. கடைசியாக 1997ஆம் ஆண்டு குவாமில் கொரியன் ஏர்லைன் விமானம் 801 விபத்துக்குள்ளானதில் 228 பேர் பலியான சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தூத்துக்குடியில் ஸ்டாலின் : உற்சாக வரவேற்பு!

ராமதாஸுடன் மோதல்… பொதுக்குழுவில் விவாதம் நடப்பது சகஜம் – அன்புமணி விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share