தென்கொரியா விமான விபத்து… 58 பேர் பலியான சோகம்!

Published On:

| By Selvam

தென்கொரியாவின் முவான் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில், 58 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் ஆறு விமான ஊழியர்களுடன் ஜெஜு ஏர் விமானம் 7C2216 தென்கொரியா நோக்கி புறப்பட்டது.

இந்த விமானமானது உள்ளூர் நேரப்படி இன்று (டிசம்பர் 28) காலை 9 மணியளவில் தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்று விமான நிலைய சுற்றுச்சுவரின் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளதாக ராய்யடர்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் பணியில் விமான நிலைய அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி அஜர்பைஜான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எம்ப்ரேயர் 190 என்ற விமானம் அஜர்பைஜானில் தரையிறங்கியபோது வெடித்தது. இந்த விபத்தில் 38 பேர் பலியான சோக சம்பவம் நாட்டையை உலுக்கிய நிலையில், மீண்டும் ஒரு விமான விபத்து நடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share