காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 17) காலை 10 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவில் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கர்நாடகா மாநிலம் பல்லாரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், ராகுல் காந்தி தனது வாக்கினை செலுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும், சசி தரூர் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் வாக்களித்தனர்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் தங்களது வாக்கினை செலுத்தினர்.
செல்வம்
அதிமுக 51-வது துவக்கவிழா: எடப்பாடி – பன்னீர் தனித்தனியே கொண்டாட்டம்!
டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா!