ஸ்ரீஹரிகோட்டாவில் ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து தற்கொலை!

Published On:

| By Kalai

Soldiers commit suicide in Sriharikota

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஏவுதளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை இராணுவ வீரர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் நேற்று(ஜனவரி 16)ரேடார் பிரிவில் சி.ஐ. எஸ். எப் துணை இராணுவ வீரரான சிந்தாமணி என்பவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சிந்தாமணி 2021 ஆம் ஆண்டு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் காவலராக தேர்வு செய்யப்பட்டு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ராடார் பிரிவில் சேர்ந்தார்.

பல மாதங்கள் நீண்ட விடுப்புக்கு பின், இம்மாதம் 10ம் தேதி பணிக்கு திரும்பினார். 15ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில்  தூக்கில் தொங்கிய நிலையில் சிந்தாமணி பிணமாக கிடந்தார். 

இந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் ஸ்ரீஹரிகோட்டா  முதல் நுழைவு வாயிலில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் சி-ஷிப்டில் பணியில் இருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் விகாஸ் சிங், தனது கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து துணை ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உயர் அதிகாரிகளின் பணி அழுத்தமா அல்லது வேறு ஏதாவது காரணமா? அல்லது சொந்த பிரச்சனையா என்ற கோணத்தில் விசாரனை நடைபெற்று வருகிறது.

துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கலை.ரா

சென்னை வந்தார் சே குவேரா மகள்: கம்யூனிஸ்ட்டுகள் உற்சாக வரவேற்பு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : பார்வையாளர்கள் மீது போலீசார் தடியடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel