“மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க விரும்பவில்லை” – ஸ்மிருதி இராணி

Published On:

| By Selvam

smriti irani says manipur national security

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றம் சாட்டியுள்ளார்

மணிப்பூர் மாநிலத்தில் குகி சமூக பெண்கள் ஆடையின்றி நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டையை உலுக்கியுள்ள இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, “இந்த பிரச்சனை உணர்வுப்பூர்வமானது மட்டுமல்ல தேசிய பாதுகாப்பு தொடர்பான தாக்கங்களையும் கொண்டது என்று எதிர்க்கட்சிகளுக்கு தெரியும். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை.

ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பேசிய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது ஆபத்தான விஷயம். மேற்குவங்க மாநிலம் மால்டாவில் இரண்டு தலித் பெண்கள் அடித்து உதைக்கப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து காங்கிரஸ் கவலைப்படவில்லை. மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதைக் காங்கிரஸ் வாய்மூடி மவுனமாக  பார்த்தது. திரிணாமூல் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதால் அதுகுறித்து பேசவில்லை” என்று தெரிவித்தார்.

செல்வம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

அவர் இல்லை என்றால் நான் இல்லை: சிம்பு குறித்து மனம் திறந்த சந்தானம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share