தூங்கும் வசதிகொண்ட முதல் ‘ஸ்லீப்பர் வந்தே பாரத்’ ரயிலை சென்னையில் உள்ள ஐ.சி.எப் ரயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை நேற்று(அக்டோபர் 24) அறிமுகப்படுத்தியது.
வந்தே பாரத் ரயில் என்பது இருக்கைகள் கொண்ட ஏசி விரைவு ரயிலாகும். இது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரை 78 வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன.
படுக்கை வசதி இல்லாததால், நீண்ட தூரப் பயணங்களுக்கு இந்த வந்தே பாரத் ரயில்கள், மக்கள் பயன்பாட்டிற்கு அமர்த்தப்படவில்லை.
இந்நிலையில்தான், படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயிலைச் சென்னை ஐ.சி.எப் ரயில்பெட்டி தொழிற்சாலை நேற்று அறிமுகப்படுத்தியது.
சென்னை ஐ.சி.எப் ஆலையும் பெங்களூருவைச் சேர்ந்த பி.இ.எம்.எல் நிறுவனமும் சேர்ந்து ரூ 120 கோடி செலவில் 16 பெட்டிகள் கொண்ட ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயிலை தயாரித்துள்ளன.
11 மூன்றாம் ஏசி (3 Tier) பெட்டிகள், 4 இரண்டாம் ஏசி (2 Tier) பெட்டிகள் மற்றும் 1 முதல் ஏசி (1 Tier) பெட்டி கொண்ட இந்த ரயிலில் 823 பேர் பயணம் செய்ய முடியும்.
இது குறித்து பேசிய ஐ.சி.எப் மேலாளர் சுப்பா ராவ், “இது போல் மேலும் 10 ‘ஸ்லீப்பர் வந்தே பாரத்’ ரயில்கள் தயாரிக்கப்படவுள்ளன. இது மட்டுமல்லாமல் 20 பெட்டிகள் கொண்ட 50 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களுக்கான ஆர்டர்களும் வந்துள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 24 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயிலகளை தயாரிப்பதற்கான திட்டமும் உள்ளது.
மேலும் இந்த ரயிலில் விபத்துகளைத் தடுக்கும் ‘கவச்’ தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது” என்றார்.
நவம்பர் 15 முதல் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் இந்த ரயில், ஊசலாட்ட சோதனைகள், அவசரக்கால பிரேக்கிங் சிஸ்டம் சோதனைகள் மற்றும் கட்டுப்பாடு மற்றும் மின் அமைப்புகளின் சோதனைகளுக்காக உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள RDSO க்கு அனுப்பப்படவுள்ளது.
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் அம்சங்கள்:
கவச் தொழில்நுட்பம்
அவசர காலத்தில் ரயில் ஒட்டுநரிடம் பேசுவதற்கான வசதி
எல்.ஈ.டி. டிஸ்பிளே
படிப்பதற்கான விளக்கு, யு.எஸ்.பி போர்ட்
பையோ வேக்கும் கழிவறை
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் அதிர்வு?… அச்சத்தில் வெளியேறிய ஊழியர்கள்!
நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் அதிர்வு?… அச்சத்தில் வெளியேறிய ஊழியர்கள்!
10 லட்சம் ரொக்கம் 50 பவுன் நகை பத்தல… வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த பேராசிரியர்!