குஜராத் மாநிலம் வதோதராவில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சமோசாவில் ஆட்டிறைச்சிக்கு பதிலாக மாட்டிறைச்சி சேர்த்து விற்பனை செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் வதோரா சிப்வாட் பகுதியில் செயல்பட்டு வந்த உணவகத்தில், சமோசாவை மொத்தமாக தயார் செய்து நகரில் உள்ள பல்வேறு உணவகங்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
இந்தநிலையில், வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சமோசாவில் ஆட்டிறைச்சிக்கு பதிலாக மாட்டிறைச்சி சேர்த்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு புகார் சென்றுள்ளது.
சம்பந்தப்பட்ட உணவகத்தில் போலீசர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது சமோசாவில் மாட்டிறைச்சி சேர்த்தது உறுதியாகியுள்ளது. அதை பரிசோதனைக்காக ஆய்வுக்கும் அனுப்பியுள்ளனர். ஆய்வு முடிவில் உணவில் மாட்டிறைச்சி சமோசாவில் சேர்த்திருந்தது உறுதியானது.
இதனையடுத்து சமோசா விற்ற கடையின் உரிமையாளர்கள் இருவர் மற்றும் ஊழியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆட்டிறைச்சியின் விலை அதிகம் என்பதால் பசுவின் இறைச்சியை சமோசாவில் சேர்த்து விற்பனை செய்து வந்ததாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.
உணவு தயாரிக்க முறையான உரிமம் கூட பெறாமல் ஐந்து மாடி தளம் கொண்ட கட்டடத்தில் சமோசா தயாரிக்கும் பணி நடந்துள்ளது. அதில் ஒரு தளத்தில் ஃப்ரீசர் வைக்கப்பட்டு மாட்டிறைச்சி பதப்படுத்தப்பட்டு வந்ததாகவும், இதுகுறித்த விசாரணை தொடரும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: முன்னந்தலையில் முடிகள் கொட்டாமல் இருக்க…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: சின்ன வெங்காய குழம்பு
கொல்கத்தாவுக்கு காப்பு கட்டியாச்சி : அப்டேட் குமாரு