உலகின் பவர்ஃபுல் பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.
ஹென்லி பாஸ்போர்ட் 2025 ஆம் ஆண்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிங்கப்பூரை அடுத்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகள் உள்ளன. கடந்த 8 வருடங்களால் இந்த பட்டியலில் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக முதலிடத்திலும் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் சிங்கப்பூர் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பாஸ்போர்ட்டுக்கு 85வது இடம் கிடைத்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ‘57 நாடுகளுக்கு’ விசா இல்லாமல் செல்ல முடியும்.
சிங்கப்பூரின் பாஸ்போர்ட் பவர்புல்லாக இருக்க அந்த நாட்டின் ராஜதந்திரம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள். பல நாடுகளுடன் அந்த நாடு கடைபிடிக்கும் நட்பு மற்றும் உறவு பாஸ்போர்ட்டை பவர்புல்லாக மாற்றியுள்ளது. பொருளாதாரம் ,வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கான உலகளாவிய மையமாக சிங்கப்பூர் பார்க்கப்படுவதும் மற்றொரு காரணம்.
சர்வதேச நாடுகள் மத்தியில் சிங்கப்பூர் மீதான நல்ல மதிப்பு காரணமாக அந்த நாட்டு குடிமக்கள் மேற்கொள்ளும் உலகளாவிய பயணங்களை எளிமையாக்கியுள்ளது. சிங்கப்பூரின் நிலையான பொருளாதார வளர்ச்சியும், அரசியல் உறுதித்தன்மையும் அந்த நாட்டின் பாஸ்போர்ட்டின் மதிப்பை உன்னத நிலைக்கு மாற்றியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதோடு , பாதுகாப்பு மிகுந்த நாடு என்பதும் ஒரு காரணி. கடந்த 2006 ஆம் ஆண்டே சிங்கப்பூர் பயோமெட்ரிக் விசாவை அமல்படுத்தி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கோவம் வரல… சிரிப்புதான் வந்தது… : பேரவையில் அதிமுகவினரை கிண்டலடித்த ஸ்டாலின்