மது போதையில் இளைஞர்கள் ஓசி சிகரெட் கேட்டு கடை ஊழியரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்தவர் வசந்த். இவர் 100 அடி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு நேற்று (அக்டோபர் 16) இரவு மது போதையில் வந்த மூன்று இளைஞர்கள் சிகரெட் வாங்கியுள்ளனர். அப்போது கடையில் இருந்த ஊழியர் சந்திரன் அவர்களிடம் சிகரெட்டுக்கான காசை கேட்டுள்ளார்,
ஆனால், அந்த இளைஞர்கள் யாரிடம் காசு கேட்கிறாய் என சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கினர். கடையில் இருந்த டப்பாக்களையும் தூக்கி வீசியுள்ளனர்.
அதோடு, ‘நாங்க எப்ப வந்தாலும் காசு இல்லாம சிகரெட் தரணும்’ என மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.
இது தொடர்பான காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியது. தற்போது, அக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
காயமடைந்த சந்திரனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து ரெட்டியார் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில், கடை ஊழியரை தாக்கிய திலாசுப்பேட்டை விஜய் , வம்பாகீரப்பாளையம் அருண் குமார் மற்றும் ஒரு சிறாரை கைது செய்தனர்.
இவர்களைப் பிடிக்க போலீசார் துரத்திச் சென்றபோது ஒருவருக்கு கால் உடைந்துள்ளது. இருவருக்கு கை உடைந்து மாவுகட்டு போடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி
மணல் மாஃபியாவால் திமுக ஒன்றிய அவைத்தலைவர் மகன் கொலை?
‘உங்க கோயிலுக்கு வர்றோம்’- சல்மான் முன்னாள் காதலி பிஷ்னோயிடத்தில் உருக்கம்!